மதுரையில் மது.போதைக்கு எதிரான மதுரா கல்லூரி மாணவர்கள் எழுச்சி மிக்க பேரணி காவல் உதவி ஆனையர் சண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது
மதுரை ஆகஸ்ட் 20
மதுரையில் மது.போதைக்கு எதிரான மதுரா கல்லூரி மாணவர்கள் எழுச்சி மிக்க பேரணி மதுரா கல்லூரியில் துவங்கி டி.பி.கே ரோடு வழியாக , நல்லமணி டிரான்ஸ்போர்ட், ரத்தினபுரம், ஜீவாநகர், ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின்ரோடு, பாலி டெக்னிக்ரோடு வழியாக கல்லூரியை சென்றடைந்தது மாணவ, மாணவிகள், கைகளில் பதாகைகளை ஏந்தி , கோஷமிட்டு வந்தனர் உடன் கல்லூரி பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் உதவி ஆணையர் சண்முகம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் மற்றும் காவலர்களும் உடன் சென்றனர்