பாபநாசத்தில் தலித் கிறிஸ்த்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியல் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் உரிமை மீட்பு போராட்டம்.


தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 11

தலித் கிறிஸ்த்தவர்களை  தாழ்த்தப்பட்டோர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தி கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பாபநாசத்தில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது.   
முன்னதாக பாபநாசம் கீழ வீதியில் இருந்து  கிறிஸ்த்தவ அமைப்புகள் சார்பில் தலித் கிறிஸ்த்தவர்களை  தாழ்த்தப்பட்டோர் பட்டியல் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. பின்னர் செபஸ்தியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவர்கள் உரிமை மீட்பு கருத்தரங்க  கூட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலையத்தின்  பங்கு தந்தை முனைவர் கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. இணை பங்கு தந்தை தோர்த்தீஸ் முன்னிலையில் நடைபெற்ற  இந்த உரிமை மீட்பு கூட்டத்தில்  பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு தலித் கிறிஸ்தவர்களை  தாழ்த்தப்பட்டோர் பட்டியல் வகுப்பில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி பேசினர். அப்போது ஜனாதிபதி ஆணையின் 3வது பிரிவை நீக்கவும், ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் அறிக்கையை உடனே  நிறைவேற்றவும், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்த்திடவும், தாழ்த்தப்பட்ட பெளத்தர்களையும், சீக்கியர்களையும் பட்டியல் இனத்தில் சேர்த்தது போல் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களையும் பட்டியல் இனத்தில் சேர்த்திட வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில்  கிறித்த அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள்,  கிறித்த சமூகத்தை சேர்ந்த பெண்கள் உள்பட  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை