மெலட்டூரில் சுதந்திரதினத்தை வீடுகள்தோறும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 7
மெலட்டூரில் சுதந்திர தினத்தை வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியபட்டாபிராமன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.பேரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகள், தெருக்கள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.பேரணியில் வீடுகள் தோறும் சுதந்திரதினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வலியுறுத்தி மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன், பேரூராட்சி துணை தலைவர் பொன்னழகுசீனு, அரசுமேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அய்யாகண்ணு, உதவி தலைமைஆசிரியர் சத்தியமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மெலட்டூர் பேரூராட்சி மன்ற முதுநிலை உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.