இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் நைவேத்திய பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்க வேண்டும் தமிழக முதல்வருக்கு முதுமுனைவர் பேராசிரியர் அழகுராஜா பழனிசாமி வேண்டுகோள்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களுக்கும் திருக்கோவில்களில் நைய்வேத்ய ப்ரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அதனை கண்காணிக்க அரசு அலுவலர்கள் அல்லாத இந்து சமூக ஆர்வலர்களை கண்காணிப்பு குழுக்களாக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்  கோரிக்கை வைக்கிறார், சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி அவர்களின் வேண்டுகோள். 
      
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சைவ மற்றும் வைணவ திருத்தலங்களிலும் சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் பிரசாதங்களை நைய்வேத்தியத்திற்குப் பின் பக்தர்களுக்கு விநியோகம் செய்யாமல் அர்ச்சகர்கள் தனது வீடுகளுக்கு எடுத்து செல்கின்றனர் என்பது  கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருத்தமான வெளிப்பாடாகும். தெய்வத்திற்கு படைத்த பிரசாதத்தை பகிர்ந்து கொடுத்தலே சமத்துவம்.அந்த சமத்துவத்தை நிலைநாட்டுவதே, திராவிட மாடல். அரசின் மக்கள் முதல்வர்.மு.க ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தும் .தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை புதிதாக நியமிக்கவும் ,நீக்கவும் தடை விதிக்க பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணை பிறப்பித்து அதனை கேரளா போன்ற மற்ற மாநிலங்களும் பின்பற்ற வழி வகுத்த திராவிட மாடல் அரசின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன்.வரும் காலங்களில் நைய்வேத்ய ப்ரசாதங்களை பக்தர்களுக்கு விநியோகிக்கவும், கோவில் நடை சரியான நேரத்தில் திறக்கவும் நேரம் முடியும் வரை பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கவும்  வேண்டும் இதனை  கண்காணிக்க அரசு அலுவலர்கள் அல்லாத இந்து சமூக ஆர்வலர்களை கண்காணிப்பு குழுக்களாக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் என அனைத்து பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை