புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை தன்னார்வலர்கள் கல்வி உபகரணங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்கள் பார்வையிட்டு பாராட்டு..


புதுக்கோட்டை ஆகஸ்ட் - 2

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஐந்தாவது புத்தகத்திருவிழா வில் கந்தர்வக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்களுடைய கற்றல் உபகரண படைப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
மாணவர்களுக்கு நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர்  தங்கமணி,உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதந்திரன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் .
மேற்பார்வையாளர் பிரகாஷ், இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்,ரகமதுல்லா,வீரமணி உடனிருந்தனர். தன்னார்வலர்கள் பிரியா, சுகன்யா,உமா, கயல் விழி,கீதா ஆகியோர் ஆர்வத்துடன் உயிர் எழுத்துக்கள், ஐம்புலன்கள்,முன்னி தொடரி, அகரவரிசை, ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகள் , சிறிய எழுத்துக்கள் , எதிர்ச் சொல் ஆங்கிலத்தில், கடிகாரம் , எண்ணுறுக்கள், மெய்யெழுத்துக்கள் ,ஏறுவரிசை இறங்குவரிசை , உயிரெழுத்துக்களும் படங்களும், சொல்லுக்கு சொல், முதல் எழுத்துடன் பல எழுத்துக்களை சேர்த்தல், திருக்குறள், எண்ணிக்கை அறிதல்,ஒருமை பன்மை, ஆங்கில வார்த்தைகள், தொலைபேசியின் ஆரம்ப நிலை, தமிழாக்கம்,ஆணிமணிச்சட்டம், விதைகள்ஆரோ வகைகள், பூக்கள் வகைகள், சத்தான உணவு பொருட்கள், ஆரோக்கியமான உணவு பொருட்கள், எலும்புக்கூடு, ஸ்டெதஸ் கோப், ஸ்கெலடோஸ் கோப், உடல் உறுப்புகளில்                          மெய்யெழுத்துக்கள், மாதிரிகள் இஸ்ரோ , இதயம் , சிறுநீரகம்  ஆகிய உபகரணங்களை காட்சிபடுத்தினர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை