கொத்தங்குடி ஊராட்சியில் கபாடி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பழனி வழங்கினார்
தஞ்சாவூர் ஆகஸ்ட் - 2
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சிஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சியில் கபாடி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கபாடி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் இரா. பழனி தனது சொந்த நிதியில் இருந்து கபாடி வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி வெற்றிபெற வாழ்த்துக்களை கூறினார். இதில் கொத்தங்குடி, எடக்குடி, குண்டூர் கிராமங்களை சேர்ந்த கபாடி வீரர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மனற உறுப்பினர்கள், கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொத்தங்குடி ஊராட்சிமன்ற தலைவர் பழனி செய்திருந்தார்.