கோவத்தகுடி அரசு கொள்முதல்நிலையம் முன்பு நெல்லை கொட்டி வைத்து பலநாட்களாக காத்திருக்கும் விவசாயிகள் நெல்கொள்முதல்நிலையத்தை உடனடியாக திறக்க விவசாயிகள் கோரிக்கை


தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் - 10

 பாபநாசம் தாலுக்கா, கோவத்தகுடி  அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் கோடை   சாகுபடியாக நெல் சாகுபடி  செய்யப்பட்டு உள்ளது.  தற்போது நெற்பயிர்கள்    அறுவடை பருவத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள்  நெற்பயிர்களை  அறுவடை செய்யும் பணியை தொடங்கி விட்டனர்.  கோவத்தகுடி  அரசு கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாத நிலையில் விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லை  விற்பனை செய்ய   அரசு  கொள்முதல் நிலையம் முன்பு  கொட்டி வைத்து கடந்த ஒரு வார காலமாக காத்து கிடக்கின்றனர்   இன்னும் சில விவசாயிகள், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் அறுவடை பருவம் தாண்டியும் நெற்பயிரை அறுவடை செய்யாமல் விட்டு வைத்துள்ளனர்  உள்ளனர். மேலும்  கடந்த சில நாட்களாக  இப்பகுதியில் மழை பொழிவு ஏற்பட்டு வருவதால்  விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகளின் சிரமத்தை  அரசு உணர்ந்து  உடனடியாக  கோவத்தகுடி  அரசு கொள்முதல் நிலையத்தை    திறந்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை விரைவில்  தொடங்க வேண்டுமென விவசாயிகள் அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை