விழிதியூர் ஊராட்சி சார்பில் வெண்ணாற்றின் கரையோர கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 7
அம்மாபேட்டை ஒன்றியம் விழிதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசிகோவிந்தராஜன் கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெண்ணாற்றின் கரையோர பகுதியில் வசித்துவரும் குருப்பலாகுடி கிராமமக்கள் வெண்ணாற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது அதனால் வெண்ணாற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, மீன்பிடிக்கவோ ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாமெனவும் வெண்ணாற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் குடியிருந்து வரும் கிராமமக்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்படி விழிதியூர் ஊராட்சிமன்றம் சார்பில் ஒலிபெருக்கிமூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.