தஞ்சை மாவட்டம் ராராமுத்திரகோட்டை ஊராட்சியில்புதியதாக வெட்டப்பட்ட கிருஸ்ணாபுரம் புதிய குளத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்

தஞ்சைமாவட்டம் ஆகஸ்ட்  29

அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் கிருஸ்ணாபுரம்  கிராமத்தில்  தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறையினர் தொடர்முயற்சியால்  மீட்கப்பட்டு அதில்  வருவாய்துறையினரின் சொந்த நிதி மூலம் குளம் வெட்டப்பட்டது   
புதியதாக வெட்டப்பட்ட  குளத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நேரில்  பார்வையிட்டார். பின்னர் அங்கு  மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி விஜயகுமார்,கூடுதல் ஆட்சியர், சுகபுத்ரா, அம்மாபேட்டை  வட்டார வளர்ச்சிஅலுவலர் ஆனந்தராஜ்,  ராராமுத்திரகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சோழன், துணை தலைவர்  புனிதாபிரகலாதன்,  மண்டல துணை வட்டாட்சியர்  விவேகானந்தன், ஊராட்சி செயலர் அசோக், மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை