தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே ரெங்கநாதபுரத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லகூடிய பொதுவழிபாதை சேதம் அறுவடை பணிகள் பாதிப்பு விவசாயிகள் புகார்
தஞ்சைமாவட்டம் ஆகஸ்ட் 29
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட ரெங்கநாதபுரத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய அரசு புறம்போக்கு பொது வழிசாலையை மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய சுய லாபத்திற்காக இரவோடு இரவாக சாலையை சேதபடுத்தி அறுவடை வாகனங்கள் உள்பட வேளாண் இயந்திரங்கள் செல்ல முடியாத வகையில் சாலையை ஜெசிபி இயந்திரம் மூலம் சேதபடுத்தி உள்ளனர் அதனால் இந்த சாலை பயன்படுத்தகூடிய விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு அறுவடை இயந்திரங்கள் உள்பட வேளாண் இயந்திரங்கள் செல்ல முடியாமல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு உடனடியாக விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பொதுவழி பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெங்கநாதபுரத்தில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த அரசு புறம்போக்கு பொதுவழி பாதையை இரவோடு இரவாக தனிநபர் சிலர் ஜெசிபி இயந்திரம் மூலம் சாலையை சேதப்படுத்தி விட்டனர் அதனால் விவசாய நிலங்களுக்கு அறுவடை இயந்திரம், உழவு இயந்திரம் உள்பட விவசாய இயந்திரங்கள் செல்ல வழியின்றி தவிக்கிறோம். அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் பல ஏக்கர் நெற்பயிர்கள் வீணாகி வருகிறது. இது குறித்து பாபநாசம் தாசில்தார், மெலட்டூர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளோம் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதப்படுத்தப்பட்ட சாலையை நடவடிக்கை எடுக்கனும் சேதப்படுத்திய சாலையை சீரமைத்து தரனும் இவ்வாறு தெரிவித்தனர்.