தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் காமராஜர் பிறந்த விழா பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா


தென்காசி மாவட்டம் ஆகஸ்ட் 16

சுரண்டை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாள் விழாவில் சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 10 மற்றும் +2 மாணவ மாணவிகளில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஒவியம், நடனம்,  விளையாட்டு போன்ற பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்ற 60 மாணவ மாணவிகளுக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் S.P.வள்ளி முருகன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். விழாவிற்கு சுரண்டை காமராஜர் நற்பணி இயக்கம் தலைவர் வழக்கறிஞர் M.சின்னதம்பி அவர்கள் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் இனை செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகரத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கனகராஜ் சிறப்புரையாற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு பண்டகசாலை தலைவர் S.K.D.ஜெயபால், ஊர் கமிட்டி நிர்வாகி T.பால்சாமி, 5வது வார்டு கவுன்சிலர் D.ராஜ்குமார், 4வது வார்டு கவுன்சிலர் அமுதா சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் C.தபேந்திரன், நாடார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் G.V.மாடசாமி, வியாபாரிகள் சங்கம் செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உதவி தலைமை ஆசிரியர் R.கனகராஜ் நன்றி கூறினார்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை