புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் மோகனூர் இல்லம் தேடி கல்வி மையத்தில் சுதந்திர தின அமுதவிழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது..


புதுக்கோட்டை மாவட்டம் ஆகஸ்ட் 16

கந்தர்வகோட்டை ஒன்றியம் மோகனூர் இல்லம் தேடிக் கல்வி மையத்தில் செயல்பட்டு வருகிறது. இவ்மையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மையத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அ.ரகமதுல்லா கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 400இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்புகளை சரி செய்யும் விதமாக   அடிப்படை வாசித்தல் தமிழ், ஆங்கிலம், கணிதம், மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி செயல்பாடுகள் ஆடல்,பாடல்   என சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து எதிர்காலத்தில் வலுவான தேசத்தை உருவாக்குவதற்கான ஆற்றல் மாணவர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என்று பேசினார். மோகனூர் மையத்தில் சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்த தன்னார் அவர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் கலைஞர் டிவியின் பேச்சாளர் முருகேசன், ஆசிரியர் ரமேஷ், வார்டு உறுப்பினர் ராஜீவ் காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவர்கள் சுதந்திர தினத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தாய் மணிக்கொடி பாடல்,தேச தலைவர்களின் வரலாறு, பரதநாட்டியம், நாடகம், உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்திருந்தனர்.சுதந்திர தின அமுத பெருவிழா வை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிறைவாக கேக் வெட்டிக் சுதந்திர தின அமுத விழாவை கொண்டினர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தன்னார்வலர்கள் காவியா,ரேகா, பிரமா, சுகன்யா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை