கும்பகோணத்தில் உலக புகைப்பட தினம் புகைப்படக் கலைஞர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 19
கும்பகோணம் காந்தி பார்க் அருகில் தஞ்சை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் நலசங்கம் சார்பில் 183 வது உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. சங்கத் துணை தலைவர் மு. சிவக்குமார் தலைமை வகித்தார். ஆலோசகர் கே. கண்ணையா பிரசாத், சங்கச் செயலாளர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். கௌரவத் தலைவர் பெ.குமார் உலக புகைப்பட தின கேக்வெட்டி போட்டோ வாழ்த்துரை வழங்கினார். சங்க மூத்த உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி புகைப்பட தினத்தை உறுப்பினர்கள் கொண்டாடினார்கள்.
முன்னதாக சங்க துணைச் செயலாளர் லட்சுமிபதி அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சங்க துணை செயலாளர் ராணி, பகுதி செயலாளர்கள் மகாதேவன் சண்முகம் ஸ்ரீராம் மற்றும் சங்க உறுப்பினர்கள் செழியன், பெ.மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.