அரசு மருத்துவமனையில் பல மாதமாக திறக்கப்படாத புறநோயாளிகள் பிரிவை திறக்கவும் மருத்துவமனைக்கு மருத்துவர்களை நியமிக்கவும் பொதுமக்கள் கோரிக்கை


தஞ்சை மாவட்டம் ஆக 22

பாபநாசம் அரசு மருத்துவமனையில் பல  கோடி ரூபாய் செலவில் கட்டிடம் மருத்துவ உபகரணங்கள் ஆகியவை இருந்தும் திறமையான, அனுபவம் இல்லாத   மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள்  இல்லாததால் பாபநாசம் அரசு மருத்துவமனை வரும்  அவசர நோயாளிகள், மற்றும்  புறநோயாளிகள்  தஞ்சாவூர், மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதனால் உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் கிடைக்காமல் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. தமிழக அரசு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு  திறமையான மருத்துவர்களை நியமனம் செய்வதோடு  24 மணி நேரமும் செயல்படும் வகையில் கூடுதலாக மருத்துவர்களை  நியமிக்க வேண்டும்.  என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் சிலர்  கூறியதாவது
பாபநாசம்    அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது கட்டுமானப்பணிகள்  முடிவுற்று ஓராண்டுக்கும் மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடு  இன்றி கட்டிடம் வீணாகும் நிலை உள்ளது.மேலும் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு  மருத்துவ பரிசோதனைக்கு வரும் சடலங்கள் குளிர்சாதன வசதி இல்லாததால் பல நேரங்களில் சடலங்கள் வீணாகி விடுகிறது அதனால் குளிர்சாதன வசதி ஏற்படுத்தனும்  மேலும்  அவசர சிகிச்சைக்காக 24 மணிநேரம் மருத்துவர்கள்  பணியில் இருக்கும் வகையில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்கனும், பல் மருத்துவபிரிவு  மற்றும் எக்ஸ்ரே  பிரிவு தினசரி செயல்பட தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்கனும் இவ்வாறு தெரிவித்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை