தஞ்சை மாவட்டம் கொத்தங்குடி ஊராட்சியில் உள்ள அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர் ஆக-23
பாபநாசம் தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சியில் வெண்ணுகுடி கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக தினக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் நெல் கொள்முதல் செய்யும் கொத்தங்குடி அதனை சுற்றியுள்ள , குண்டூர், சாத்தனூர். உதாரமங்களம் பகுதியில் குறுவை முன்பருவத்தில் நெல் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை செய்யும் பணி நடை பெற்று வருகிறது. வெண்ணுகுடி அரசு கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அருகில் வேறு எஙகும் நெல்கொள்முதல் நிலையம் இல்லாத நிலையில் அறுவடை செய்த நெல்லை என்ன
செய்வது என தெரியாமல் விவசாயிகள்
தவிக்கின்றனர். இன்னும் சில விவசாயிகள் கொள்முதல்நிலையம் திறக்காததால் அறுவடை செய்யும் பணியை தாமதப்படுத்தி வருகின்றனர். விவசாயிகளின் சிரமததை அரசு உணர்ந்து உனடியாக வெண்ணுகுடி அரசு கொள்முதல்நிலையத்தை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படம்.கொத்தங்குடி அருகே அரசு கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் அறுவடை செய்யப்படாமல் உள்ள நெற்பயிர்களின் ஒருபகுதியை படத்தில் காணலாம்