மதுரை திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் மாத கணக்கில் எரியாத விளக்குகள் சரி செய்யுமா மதுரை மாநகராட்சி ?
மதுரை ஆகஸ்ட் 16
மதுரை திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் மேம்பாலத்தில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லவும் இந்தபாலத்தை கடந்துதான் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன கடந்த ஒரு வார காலமாக இந்த பாலத்தில் நான்கு விளக்குகள் மட்டுமே எரிகின்றன இதே ரோட்டில் மயில்சிலை வைக்கப்பட்டுள்ள ரவுண்டானா ஹை. மாஸ் விளக்கு மாதக்கணக்கில் விளக்கு எரியவில்லை இப்படி இருட்டிய நிலையில் இருந்தால் வழிப்பறிக்கு வழி வகுக்காதா? மதுரை மாநகராட்சியில் தெருவிளக்கு பிரிவு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழப்பி உள்ளனர் உடனே சரி செய்யுமா மாநகராட்சி நிர்வாகம்