வடக்குமாங்குடி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் - 10
அம்மாபேட்டை ஒன்றியம், வடக்குமாங்குடி ஊராட்சியில் திடக்கழிவு குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. ஊராட்சியில் தினசரி தூய்மைபணி மூலம் சேகரிக்கப்படும் தேவையற்ற குப்பைகள் ஊராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை தொட்டிகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை என தரம்பிரித்து பல மாதங்களாக சேகரித்து வைக்கப்பட்டிருந்த தேவையற்ற குப்பைகளை குப்பை தொட்டியில் இருந்து வெளியேற்றும் பணி நடைபெற்றது. இதன் மூலம் தேவையற்ற மக்கிய குப்பைகள் டிராக்டர் டிப்பர் மூலம் வெளியேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் செய்து இருந்தனர்.