ஆதரவற்றோருக்கு நேதாஜிசுபாஷ் சேனை தலைவர் மகாராஜன். உதவி


நெல்லையில்
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு  முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவர்களும், அவரது கணவரும், அவரது வீட்டில் வேலை பார்த்த மாரியம்மாள் என்ற கணவரை இழந்த ஒரு தாயாரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அதில் மாரியம்மாளுக்கு 3 பெண் குழந்தைகள். ஏற்கனவே தந்தையை இழந்த குழந்தைகள் தாயையும் இழந்து ஆதரவற்று வயதான பாட்டி வீட்டில் வளர்ந்து வருகின்றனர். அப்போதே அவர்களுக்கு இயன்ற உதவி செய்வதாக வாக்களித்திருந்தோம். இன்று நேதாஜி சுபாஷ் சேனை சார்பில் அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்தோம். உதவி செய்வதில் சாதி பார்க்க கூடாது. அந்த வகையில் அவர்கள் எந்த மதம் சாதியென்று எமக்கு தெரியாது.  ஆனால் ஏழை சகோதரிகளின் வாழ்விற்கு நாங்களும் ஒரு சிறு துரும்பாக இருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. (எவருடைய பாராட்டுதலுக்கும் அல்ல. மனித நேயம் வேறு, சாதி வேறு. மனிதர்களாய் இருப்போம், மனிதம் காப்போம்)

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை