இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலருக்கு பரிசு வழங்கி பாராட்டிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்..
புதுக்கோட்டை ஆகஸ்ட் - 2
புதுக்கோட்டை மாவட்டமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் ஐந்தாவது புத்தக திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழிகாட்டல் படியும் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் ஆலோசனைபடியும் இல்லம் தேடி திட்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள தன்னார்வலர்கள் தங்களுடைய கற்றல் விபரங்களை காட்சிப்படுத்தி அதனை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கி வருகின்றனர். அதேபோல் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தரும் மாணவர்களிடம் தன்னார்வலர்கள் பொது அறிவு கேள்விகள் மற்றும் விடு கதைகள் கேட்டு சரியாக பதில் கூறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே. மணிவண்ணன் அவர்கள் ஒவ்வொரு நாளும் அரங்கிற்கு வருகை தரும் தன்னார்வலர்களுக்கு ஆயிரம் மதிப்பிலான பரிசு புத்தகங்களை வழங்கி பாராட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று இல்லம் தேடி கல்வித் திட்டம் அரங்கிற்கு திடீரென வருகை தந்த மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் செய்யும் மணிவண்ணன் கந்தர்வகோட்டை தன்னார்வலர்கள் மற்றும் புத்தக திருவிழாவிற்கு வருகை தந்த மாணவர்களை பாராட்டினார்.
நிகழ்வின்போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் தங்கமணி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுசிந்தரன், புதுக்கோட்டை பள்ளி துணை ஆய்வாளர் குரு. மாரிமுத்து,
அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் கு.கலா ஆவுடையார் கோயில் வட்டார கல்வி அலுவலர் மலர்விழி, புவனேஸ்வரி
இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன், கந்தர்வகோட்டை வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பிரகாஷ்,
இல்லம் தேடி கல்வித் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் ,ரகமதுல்லா,
புதுக்கோட்டை இல்லம் தேடி கல்வி திட்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரமணி மற்றும் தன்னார்வலர்கள் பிரியா, சுகன்யா, உமா கயல்விழி ,கீதா ஆகியோர்களுடன் இருந்தனர்.