சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் தேசிய கொடி ஏற்றி மரக்கன்றுகள் நடப்பட்டன.
புதுக்கோட்டை ஆகஸ்ட் 16
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் 75 ஆவது சுதந்திர தின பவள விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்திற்கான தேசிய கொடியை தலைமை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் திரு கங்காதரன் அவர்கள் ஏற்றினார். அப்போது பேசியதாவது
75வது சுதந்திர தினத்தைப் பற்றி மாணவர்களுக்கு சுதந்திர தின வரலாறு எவ்வாறு விடுதலை பெற்றோம்
என்றும், புதுக்கோட்டையில் பிறந்த சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் (1887) பிறந்தார். வழக்கறிஞர். நாடகம், இசை உள்ளிட்ட கலைகளிலும் ஆர்வம் கொண்டவர். சமூக சீர்திருத்தச் சிந்தனை மிக்கவர்.
சென்னையின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்துக்கு ஒப்புதல் பெற்று, ஓராண்டுக்குள் அடிக்கல் நாட்டினார். 1942-ல் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு நாக்பூரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சைமன் கமிஷன் எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், சுதேசி இயக்கம் ஆகியவற்றில் இவரது பங்கு மகத்தானது. தனது அனைத்து சொத்துகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு, வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறார்.இந்நாளில் அவரது விடுதலை போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்தார்.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) க.மணிமேகலை முன்னிலை வகித்தார்.ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பாரத் கேஸ் கம்பெனி உரிமையாளர் விஜயராம் வருகை புரிந்து மரக்கன்று மற்றும் கூண்டுகளை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இராஜேந்திரன், பொருளாளர் அச்சுதன், பல்கலைக்கழக பேராசிரியர் அமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி இலக்கியா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மலர்கொடி,வார்டு உறுப்பினர் கலாராணி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாணவர்கள் தேசிய கொடி, தேசிய சின்னம், தேசிய பறவை,தேசிய விலங்கு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விடுதலை போராட்ட வரலாற்றை விளக்கும் விதமாக பல்வேறு வகையான தலைப்புகளில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கலை நிகழ்ச்சிகளை மாணவர்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர்.நிறைவாக மாணவர்கள் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அ.ரகமதுல்லா விடுதலை போராட்டத்தில் பங்காற்றிய வீரர்களை நினைவு கூறுகையில் காந்தி,நேரு, வேலுநாச்சியார், சுபாஷ் சந்திர போஸ்,வ.உ.சிதம்பரனார், பாரதியார் முக கவசங்களை வழங்கி மாணவர்கள் அணிந்து மகிழந்தனர் . இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் நிவின், வெள்ளைச்சாமி,செல்விஜாய் ஆகியோர் செய்து இருந்தனர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பழனிவேல், பெற்றோர்கள் ரஞ்சிதா, திவ்யா,சசி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.