மெலட்டூரில் பிளாஷ்டிக் பைகளுக்கு பதிலாக துணிபைகள் பயன்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள், வணிகளுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 10
மெலட்டூரில் பிளாஷ்டிக் பைகளுக்கு பதிலாக துணிபைகள் பயன்படுத்த வலியுறுத்தி பேரூராட்சி சார்பில் பொதுமக்கள், வணிகர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியபட்டாபிராமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மஞ்ச பைகளை வழங்கி விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணை தலைவர் பொன்னழகுசீனு, உறுப்பினர், காஞ்சிதுரை,
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மெலட்டூர் கடைவீதி உள்பட முக்கிய வீதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறச்சிகடைகள் மற்றும் பிற வணிகம் நடத்திவரும் வணிகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மஞ்ச பைகளை வழங்கி பிளாஷ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாமெனவும், துணி பைகளை பயன்படுத்த வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.