இரும்பு தலை ஊராட்சியில் வீடு வீடாக தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜிதொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 13
அம்மாபேட்டை ஒன்றியம் இரும்புதலை ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி வீடுகளுக்கு தேசிய கொடியை வழங்கிய நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுதந்திர இந்தியாவின் 75வது சுதந்தரதினத்தை வீடுகள்தோறும் தேசிய கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடிகள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன், ஊராட்சி துணை தலைவர். மங்கையர்கரசி உறுப்பினர்கள், துளசிஅய்யா,ரமேஷ்,பங்கஜவள்ளி மற்றும் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் செய்து ஜெகத்குரு செய்து இருந்தார்.