தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு, தனியார் கட்டுமான பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்.


தஞ்சாவூர் ஆகஸ்ட் 2

 பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் தஞ்சை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் எட்டாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக   கபிஸ்தலம் கடைவீதியில் இருந்து  ஏராளமான தொழிலாளர்கள்  கைகளில் கொடிகளை ஏந்திய வண்ணம்  கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி புறப்பட்டு    மாநாட்டு திருமண மண்டபத்தினை வந்தடைந்தனர்.  தொடர்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சியும், தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றது. பின்பு ஏ ஐ டி யு சி யின் மாநிலச் செயலாளர் சந்திரகுமார் தொடக்க உரை நிகழ்த்தினார். இதில் தமிழக கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு தனியார் கட்டுமான பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூபாய் ஆறாயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு வீடுகட்டி தரவேண்டும். வேலையில்லாத காலங்களில் நிவாரனம் வழங்க வேண்டும் உட்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு நிகழ்ச்சியில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் பாரதி, மாநிலக்குழு சாமுதர்மராஜன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், துணைசெயலர் சீனி.சுகுமாறன், உள்பட  மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்,கட்டுமான தொழிலாளர்கள்   பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை செய்தியாளர்
எஸ்.மனோகரன்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை