ராராமுத்திரகோட்டையில்மின் கம்பிகளுக்கு இடையூறாகஇருந்த மரக்கிளைகளை ஊராட்சி சார்பில் வெட்டி அகற்றும்பணி
தஞ்சாவூர் ஆகஸ்ட் 2
அம்மாபேட்டை ஒன்றியம், ராராமுத்திரகோட்டை பகுதியில் சாலையோரம் மின் கம்பிகளுக்கும்,போக்குவரத்துக்கும் இடையூறாக சாய்ந்த நிலையில் இருந்த மரக்கிளைகளை ஊராட்சி சார்பில் வெட்டி அகற்றும்பணி நடைபெற்றது. ராரமுத்திரகோட்டை மெயின்ரோடு, கீழத்தெரு, கீழ அம்பலகாரதெரு உள்பட பல பகுதியில் மின்கம்பிகளை மீது உரசியபடி மரக்கிளைகள் சாயந்த நிலையில் இருந்து வந்தது அதனால் காற்று வீசும் சமயங்களிலும், மழைகாலங்களிலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால கிராமமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். கிராமமக்களின் சிரமத்தை அறிந்த ஊராட்சி தலைவர் சோழன் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை தொழிலாளர்கள் மூலம் வெட்டி அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். அதனால் அடிக்கடி மின்தடை ஏற்படும் பிரச்சனையில் இருந்து கிராமமக்கள் விடுபட்டு நிம்மதியடைந்தனர்.
கிராமமக்களுக்கும், மின்பாதைக்கும் இடையூறாக இருந்த மர கிளைகளை வெட்ட உடனடி நடவடிக்கை எடுத்த ஊராட்சிமன்ற தலைவருக்கு கிராமமக்கள் நன்றி பாராட்டினர்.