பாபநாசத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து சாலைமறியல் போராட்டம்


தஞ்சாவூர் ஆகஸ்ட் 2
.
பாபநாசத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து சாலைமறியல் போராட்டம்
தமிழக மக்களுக்கு துரோகம் இழக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில்  பாபநாசத்தில் சாலைமறியல் போராட்டம் மாநிலக்குழு உறுப்பினர் சாமுதர்மராஜ் தலைமையிலும் ஒன்றியசெயலாளர் கே.அப்துல்கபூர் முன்னிலையிலும்  நடைபெற்றது. அரசு நிறுவனங்களை  தனியார்மயமாக்கலை கைவிடு, மின்சார சட்ட திருத்த மசோதா‌ உள்பட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி  மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த சாலைமறியல் போராட்டத்தில் 
 ஏசிஐடியூசி மாவட்ட செயலர் தில்லைவனம், விவசாய தொழிலாளர் சங்கம் பாலு.  இந்தியகம்யூனிஸ்ட் ஒன்றியசெயலர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலர் முரளி,  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை