தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தி நேரு வேலு நாச்சியார் சுபாஷ் சந்திர போஸ் வ .உ. சி.ஆகியோரின் முக அட்டை வெளியீடு...
புதுக்கோட்டை ஆகஸ்ட் 16
புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேரு காந்தி, வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் முகபடிமங்களையும் ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதிய எங்கள் தேசம் என்ற புத்தகத்தை மாவட்ட தலைவர் வீரமுத்து அவர்கள் வெளியிட கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா பெற்றுக் கொண்டனர்.. எங்கள் தேசம் என்ற புத்தகத்தை வெளியிட்டு மாவட்ட தலைவர் வீரமுத்து அவர்கள் பேசியபோது..
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறோம். சுதந்திர தினத்தை தமிழ்நாடு அரசு வெகு விமர்சையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டாடி வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாக தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பல்வேறு வகையான நிகழ்வுகளில் பங்கெடுத்தது போல சுதந்திர தின நிகழ்வுகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூக அட்டைகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவர்கள் பயன் படக்கூடிய வகையில் நேரு, காந்தி, வ
உ. சிதம்பரனார், நேதாஜி, வேலு நாச்சியார் சுதந்திரத்திற்கு பாடுபட்டதை நினைவு கூர்ந்தார். மாணவர்கள் சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை அறியக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் பயனுள்ள வகையில் உள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட பெருளாளர் விமலா, கா.ஜெயபாலன்,
சாலை வேலம்மாள்,முத்தமிழ் செல்வன்,ரகுமான்,நேரு யுவ கேந்திரா நமச்சிவாயம்,ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.