திருநெல்வேலி மாநகராட்சியில்75வது சுதந்திர தின கொடியேற்று விழா
திருநெல்வேலி ஆகஸ்ட் - 16.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சியின் சார்பில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை மற்றும் மாநகராட்சிக்கு எதிரே உள்ள வ. உ.சி மணிமண்டபத்தில் உள்ள வ. உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேயர்அதன் பின்பு நெல்லை மாநகராட்சியின் மேயர் என்ற முறையில் தேசியக்கொடி ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் மேலும் மண்டல சேர்மன்கள் , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி அவர்களை கௌரவித்தார்அதன் பின்பு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாநகராட்சி ஆணையர் திரு சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணை மேயர் கே ஆர் ராஜு, மண்டல சேர்மன்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மாணவ மாணவிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.