தஞ்சை மாவட்ட பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 29
பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவுக்காக 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
புதியதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற துவக்கவிழா நிகழ்ச்சியில் துணை சுகாதார இயக்குனர் திலகம், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கோவிஅய்யாராசு, பாபநாசம் பேரூராட்சிதலைவர் பூங்குழலிகபிலன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர் குமரவேல் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், செய்து இருந்தனர்