கும்பகோணம் பகவத் விநாயகர் ஆலயத்தில் 11 இலட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் குபேர விநாயகர் அலங்காரம் .ஏராளமான பக்தர்கள் தரிசனம்


தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 30

கும்பகோணம் மடத்துத்தெருவில் உள்ள புகழ்பெற்ற பகவத் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாள்தோறும் விநாயகருக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு  வருகிறது. இந்நிலையில் விழாவின் ஏழாம் நாளான நேற்று இரவு 11 இலட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் பகவத் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு  குபேர விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த சிறப்பு அலங்காரத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுடன் சேர்த்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளின் ரூபாய் நோட்டுகளும் இடம் பெற்றிருந்தன. மேலும் மூலவர் பகவத் விநாயகர் தங்க கவசம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்து  பகவத் விநாயகரை தரிசனம் செய்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை