உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 28 கொண்டாடப்படுகிறது -வனவளத்தை பாதுகாப்போம் புவியியல்பேராசிரியர் முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள்


திருநெல்வேலி ஜுலை 24

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் (World Nature Conservation Day) ஒவ்வோர் ஆண்டும் ஜீலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
 நம் வாழ்வில் இயற்கையின் முக்கியத்துவத்தையும், அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நாம் இந்த நாளில் மட்டுமல்லாமல் தினமும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கையைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலைத்தன்மையை (Sustainability) ஊக்குவிக்கவும் இந்த நாள் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

மனிதன் உள்பட உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளும் உயிர் வாழ்வதற்க்கு ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது. இவற்றுக்கு அடிப்படையான இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் கடமையாகும். நவினமயமாதல் என்ற பெயரில் பசுமைக்காடுகள் மரங்கள், உயிரனங்கள், விளைநிலங்கள், நீர்   நிலம், காற்று, ஆகாயம் என அனைத்தும் மாசுக்களால் நிறைந்திருக்கின்றன. மாசற்ற, சுகாதாரமான உலகமைய பாடுபட வேண்டியது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை. நீர் வளத்தையும், நில வளத்தையும் பாதுகாக்க முயல்வோம். இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். என உலக அளவில் இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றன. இயற்கை வளங்களை மரபுரீதியாக பாதுகாத்து இயற்கை வளங்களோடு தங்களது வேளாண்மை பண்பாட்டை தாங்கி வாழும் வேளாண்மரபினரை போற்றி வணங்குவோம்
.
இயற்கை வளத்தை ஒன்றையும் விடாமல் சுரண்டினர்.
இதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை நெருக்கடிக்குள்ளாகி உள்ளன. தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை மனிதர்களுக்குப் பெரும் சோதனையாகிவிட்டன. மேற்சொன்ன நிலையை மாற்றவும், ஆய்வுகள் நடத்தி தீர்வு காணவும் எண்ணிய ஐ.நா. சபை 1992-ல் சுற்றுச்சூழல் வளர்ச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தது. இம்மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டது. இதில் சுற்றுச்சூழல் கல்வியை எல்லா நிலைகளிலும் கொண்டுவர வேண்டும்’ என்று உறுதி எடுக்கப்பட்டது. இதற்கு “அஜெண்டா-21” என்று பெயரிடப்பட்டது. இதன் மூலம் கல்வி, பொது விழிப்புணர்வுப் பயிற்சி போன்றவை சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டிய காரணிகளாகக் கொள்ள வேண்டும் என்று முடிவானது. மேலும் சுற்றுச்சூழல் கல்வி , கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்:
நேற்றைய இயற்கை அழிவிலிருந்து உலகினை மீட்டெடுக்கவும், இன்றைய இயற்கை அழிவிலிருந்து உலகைப் பாதுகாக்கவும், நாளைய அல்லது எதிர்கால உலகில், இயற்கை வளங்களினால் மனித சமூகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளில் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் சமாளிக்கவும், ஆக்கப்பூர்வமான சுற்றுச்சூழல் கல்வி தேவைப்படுகிறது. இக்கல்வியின் மூலம் இருக்கும் வளங்களைக் கொண்டு, முன்னேற்றத்திற்கான வழிவகைகளைச் சிந்திப்பதும், அவற்றைச் செயல்படுத்துவது விதமாக இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அரசு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரிகள் சுற்றுச்சூழல் அறிவியல் என பாடம் இளநிலை பட்டத்தில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர்கள் இதனை அவசியமாக படித்து வருகிறன 2005 ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் அரசு  கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியல் இப்புத்தகத்தை எழுதிய புவியியல் பேராசிரியர் கே. குமாரசாமி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அழகப்பமோசஸ்  முதல்வர், பிஷப் கீப்பர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி மற்றும் வசந்தி பாரதிதாசன் பல்கலைக்கழகம் போன்ற பேராசிரியர்கள். இப்புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி உள்ளனர் இதனை சுற்றுச்சூழல் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு அதிக முக்கியத்துவம் கொடுத்து புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன இதை படிக்கும் மாணவர்கள்  வளங்களை எவ்வாறு பாதுக்கப்பட வேண்டும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்கள் இப்பட நூலில் இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி காரணமாக இயற்கை அழிந்து கொண்டு வருகிறது அறிவியல் எவ்வாறு இந்த உலகிற்கு முக்கியமோ அதே அளவிற்கு இயற்கை வளங்களும் முக்கியம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்படுவோமாக இந்த இயற்கை வளங்கள் நமக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் பயன்படும் வகையில் பாதுகாப்போம் மும்மாரி மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் நாடு செழிக்கும் பஞ்சம் பட்டினி இல்லாத  நாடாக இயற்கை வளமிக்க பூமியாக உருவெடுக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை  விவசாய நாடாக  உருவாக பாடுபடுவோம் நம்ம செய்ய வேண்டிய ஒரே கடமை இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டியது மட்டுமே.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை