தூத்துக்குடியில் நடைபெறும் நகராட்சிமாநகராட்சிபணியாளர்களின்குழந்தைகளுக்கானபரிசளிப்புவிழாவின் முதல்அழைப்பிதழ் திருமதி.கனிமொழிM.P அவர்களுக்கு வழங்கப்பட்டது
தூத்துக்குடி ஜுலை – 10
10 மற்றும் +2 அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்ற நகராட்சி மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் 12 வது ஆண்டைய விழா 31-7-2022 அன்று தூத்துக்குடியில் நடத்துவது என முடிவு செய்த நிலையில் இன்று மாலை இவ்விழாவின் முதல் அழைப்பிதழினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது. திருமதி.கனிமொழி அவர்கள் கட்டாயம் கலந்து கொள்வதாக உறுதியளித்தார்கள். இந்த சந்திப்பின்போது தூத்துக்குடி மாநகராட்சியின் மாண்புமிகு மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் உடனிருந்தார்கள்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டமைப்பின் தலைவர் திரு.பிரின்ஸ் ராஜேந்திரன், செயலாளர் திரு.ஸ்டன்லி பாக்கியநாதன், பொருளாளர் திரு.ஜான்சன், துணைத்தலைவர் திரு.தனசிங், சுகாதார அலுவலர் திரு.அரி கணேசன், ஓட்டுநர் சங்க தலைவர் திரு.அன்பழகன், செயலாளர் திரு.ஜவகர், அமைச்சுப் பணியிளர் சங்க திரு.சேவியர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளார் திரு. இரா.சீத்தாராமன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தூத்துக்குடி கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஒருங்கினைந்து, ஒற்றுமையாக திட்டமிட்டு செயல்படுவது பாராட்டத்தக்கதாகும்.
இரா.சீத்தாராமன்
மாநில பொதுசெயலாளர்