மழை பெய்தால் தண்ணீரில் மிதக்கும் சுப்பிரமணியபுரம் C 2 காவல் நிலையம் சரி செய்யுமா மதுரை ஸ்மார்ட் சிட்டி?மாநகராட்சி ?
மதுரை ஜூலை 31
மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் உள்ளது C2 சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் இங்கு மழை பெய்தாலே யாரும் காவல் நிலையத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு முன்னால் உள்ள வடிநீர் கால்வாய் முழுவதும் அடைத்துள்ளதால் தண்ணீர் தெப்பகுளம் போல் காட்சி அளிக்கிறது காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளும் , புகார் அளிக்கவரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் ஸ்மார்ட்சிட்டி என்று சொல்லிகொள்ளும் மதுரை மாநகராட்சி முதலில் மதுரை முழவதும் உள்ள சாக்கடை அடைப்பை சரிசெய்தால் தான் மதுரை ஸ்மார்ட் சிட்டி என பெருமையாக சொல்லிகொள்ள முடியும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது செய்யுமா மதுரை மாநகராட்சி?