களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி ஆணையை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்
திருநெல்வேலி ஜுலை 7
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வந்த, சாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கின் சகோதரர் மணிகண்டனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முறையீடு செய்து வந்தது. இந்நிலையில் இன்று மணிகண்டனுக்கு களக்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி ஆணையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார். மணிகண்டனுக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் கே.ஶ்ரீராம், அசோக் தாயார் ஆவுடையம்மாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், சுடலைராஜ், செண்பகம் பெருமாள், துரைராஜ், நெல்லை தாலுகா செயலாளர் நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.