வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் ஆனி தேர் திருவிழா (இரண்டு வருடங்கள் கழித்து நடைபெற்றதால்) திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி ஜுலை-12
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் வாசுதேவநல்லூர் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலுமான பக்தர்களுக்கு சிவனும் சக்தியாக ஒரே உருவமாக அமையப்பெற்ற அர்த்தநாதீஸ்வராக காட்சி கொடுக்கும் அருள்மிகு சிந்தாமணி நாதர் சுவாமி திருக்கோயில் ஆனித் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணங்களுக்காக இத்திருவிழா நடைபெறவில்லை. இதனை தொடர்ந்து இந்த வருடம் ஆனித் திருவிழா பத்து நாட்கள் நடைபெற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது. எட்டுத்திருநாள் முடிந்த நிலையில் இன்று ஒன்பதாம் திருநாளாக ஆனி தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. மதியம் ஒரு மணி அளவில் பக்த கோடிகள் புடை சூழ வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து சரியாக நான்கு மணி அளவில் தேர் நிற்கும் நிலையத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நாளை பத்தாம் திருநாளாக தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், கண்காணிப்பு பணியிலும், பாதுகாப்பு பணியிலும் காவல்துறையினர் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர் திருவிழா நடைபெறும் பொழுது தீயணைப்புத் துறை வாகனமும் தொடர்ந்து தேருக்கு பின் வந்தது. மின்சாரத் துறையினரும் மின் கம்பிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.