மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சை மாவட்டம்
பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் சுவாமிநாதசுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி குமார் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.