அம்மாபேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி ஓய்வு பாராட்டுவிழா ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம், ஜூலை 30
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வந்த சரோஜா மற்றும் ராணி ஆகியோர் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவர்களுக்கு பாராட்டுவிழா மற்றும் பிரிவு உபச்சாரவிழா ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், வட்டாரவளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜ், ஊராட்சிசெயலர் ஜெகத்குரு உள்பட பலர் கலந்து கொண்டு ஓய்வுபெறும் அலுவலர்களை வாழ்த்தி பேசினர். இதில் ஊராட்சிமன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், ஊராட்சிசெயலர்கள் பலர் கலந்து கொண்டனர்.