மதுரை பூஞ்சுத்தி கிராமத்தில் உலக நன்மைக்காக யாகசாலை பூஜை
மதுரை ஜுலை-4
மதுரை மாவட்டம் பூஞ் சுத்தி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் , பூஞ் சுத்திஊராட்சி மன்ற கவுன்சிலரும், முக்குலத்தோர் வாழ்வுரிமை பேரியக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தேவர் ஆகியோர் தலைமையிலும்
உலக நன்மைக்காக வேண்டி 4 ம் ஆண்டு கோ பூஜை, சங்கட ஹர மஹா கணபதி ஹோமம், ஷோடஸ மஹாலஷ்மி ஹோமம், குபேர லஷ்மி ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், நஷ்த்திரசாந்தி ஹோமம் மற்றும் சர்ப சாந்தி ஹோம 1008 கலச பூஜை சாது. சா . பாபு.ஆச்சாரியார், ஸ்ரீசக்ரவர்த்தி ஆச்சாரியார், ஸ்ரீலஸ்ரீ புத்தாத்மனந்த சரஸ்வதி சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ அகோர,சிவம் கணேச சுவாமிகள், பிள்ளையார்பட்டி நவாக்கரி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில்
சிவாச்சாரியார்கள் 1008 கலசங்கள் வைத்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் செய்தனர்
நிகழ்வின் "ஹை லைட்டாக " பூஞ்சுத்தி கிராமத்தில் உ ள்ள ஏழுபெண்குழந்தை களை தேர்ந்தெடுத்து மஞ்சள் ஆடை உடுத்தி விரதம் இருக்க வைத்து அவர்களை சப்தகன்னிமார் தெய்வங்களாக பாவித்து பூஜை செய்யப்பட்டது
யாகசாலை பூஜையில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள்
உறியவர்களிடம் முறையாக வழங்கப்பட்டது
யாகசாலை பூஜை ஏற்பாட்டினை ஜெயக்குமார்தேவர், சக்கரவர்த்தி ஆச்சாரியார், மற்றும் அவரது நண்பர்களும் மிக சிறப்பாக செய்திருந்தனர்