பாபநாசம் அருகே பாப்பா வாய்க்காலில் ஆக்கிரமிப்பு பகுதிகள் பொதுப்பணித்துறையினரால் அகற்றப்பட்டது
தஞ்சாவூர் ஜூலை 23
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், மெலட்டூர் வருவாய் சரகத்திற்கு உட்பட்ட இடையிருப்பு வருவாய் கிராமத்தில் பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கிராமமக்கள், வருவாய்துறை.மற்றும் பொதுப்பணித்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து பாப்பா வாய்க்காலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியர் விவேகானந்தன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வபாரதி, பாபநாசம் உதவிகாவல் ஆய்வாளர்கள் குமார், இளமாறன் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் வட்ட அளவையர்கள் மம்தாபீவி, அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சர்வே செய்யப்பட்டது பின்னர் பாப்பா வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகள் ஜெசிபி இயந்திரம் மூலம்
அகற்றப்பட்டது. உடன் வருவாய்ஆய்வாளர் ஸ்ரீதேவி கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் கிராமமக்கள் பலர் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக இடையிறுப்பு பகுதியில் பலமணிநேரமாக பதற்றமாக காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க பாபநாசம், மெலட்டூரை சேர்ந்த போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.
தஞ்சை செய்தியாளர்
எஸ்.மனோகரன்