தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஏ.பெரியகருப்பன் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் சந்தித்தார்..-
விருதுநகர் ஆகஸ்ட் 1
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் தந்தை முன்னாள் அமைச்சர் தங்க பாண்டியன் அவர்களின் 25 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிகழ்வில் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்களையும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் அவர்களை சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் திரு கு.தியாகராஜன் அவர்கள் பேசியதாவது ஆசிரியர் அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து நீண்ட நேரம் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.. அமைச்சர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், மாநில அமைப்பு செயலாளர் ஏ.ரமேஷ்,மதுரை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட தலைவர் தசாதீபன்,பொருளார் மாரிமுத்து,
திருச்சி மாவட்ட செயலாளர் உதுமான் அலி, திருச்சி மாவட்ட துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை மாவட்ட செய்தித் தொடர்பாளர் அ.ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.