நமது தின ஜெயம் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் சாக்கடை அடைப்பு சரி செய்யப்பட்டது
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
மதுரை ஜுலை 25
மதுரை திருப்பரங்குன்றம் சன்னதி தெரு சொக்கநாதர் கோவில் வாசலில் சாக்கடை அடைப்பு உள்ளதாக நேற்று முன் தினம் "நமது தின ஜெயம் நாளிதழில் " செய்தி வெளியிட்டு இருந்தோம் செய்தி எதிரொலியாக இன்று மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரி செய்தனர்
மதுரை ஜன_29 தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக தமிழக முதல்வரின் திருக்கரங்கரங்களால் முதல் பரிசை பெற்றC3 SS காலனி காவல் நிலைய ஆய்வாளர் காசிஅவர்களுக்கு நமது தின ஜெயம் காலை நாளிதழ் / மக்கள் நல உரிமைகள் கழகம் சார்பில் ஆசிரியர் / தலைவர் ஏ.கே.பாஸ்கர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் மாநில வழக்கறிஞர் அணிமாநில து.செயலாளர் மூத்த வழக்கறிஞர் ரவி கருப்பையா மதுரை மாவட்ட செயலாளர் கப்பலூர்சுந்தரமூர்த்தி, மாநில து.செயலாளர் சந்திரசேகர் (TVS ) மாவட்ட ஆன்மீக அணி தலைவர் ஐயா பொன்ராஜ் மாநில இளைஞர் அணி து.செயலாளர் ராஜ கீதம் பத்ரி ஆகியோர் உள்ளனர்
மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் விபரங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்ட போக்குவரத்து காவல்துறை மதுரை மாநகரில் தமுக்கம் சந்திப்பு முதல் கோரிப்பாளையம் சந்திப்பு வரை நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணிகளின் தொடர்ச்சியாக கோரிப்பாளையம் AV பாலம் நுழைவாயிலில் கட்டுமான பணி நடைபெற இருப்பதால் வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக கீழ்க்கண்டவாறு 28.02.2025 அன்று வெள்ளிக்கிழமை சோதனை ஓட்டமும் 01.03.2025 அன்று சனிக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றமும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோரிப்பாளையதிலிருந்து சிம்மக்கல் மற்றும் நெல்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தேவர்சிலையில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலையில் சென்று புதிதாக கட்டுப்பட்டுள்ள இணைப்பு பாலம் வழியாக மீண்டும் AV பாலத்தை அடைந்து அண்ணாசிலை வழியாக செல்ல வேண்டும். கல்பாலம் சந்திப்பில் இருந்து ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கலைக்கல்லூரி வழியாக கோரிபாளையம் வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. செல்ல எந்தவொரு அண்ணாநகர், தெப்பக்குளம், காமராஜர் சாலை வழியாக செல்லும் கனரக மற்றும் ...