பாபநாசம் பேரூராட்சியில் சாலைவசதி இன்றி அவதியுறும் கிராமமக்கள் சாலையை சீர்படுத்தி தரப்படுமா கிராம மக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை மாவட்டம் ஜுலை 27
பாபநாசம் பேரூராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு பகுதிக்கு உட்பட்ட அந்தோணியார் கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வரும் சிமெண்ட் சாலை இடிந்து, கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது சேதமடைந்த சிமெண்ட் சாலையை சீரமைக்க வேண்டுமென கிராமமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏ உள்பட பலர் வந்து பார்வையிட்டு சென்ற பின்னரும் சேதமடைந்த சாலையை சீரமைக்க பாபநாசம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கிராமமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அந்தோணியார் தோப்புத்தெரு கிராமவாசிகளுக்கு உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தோணியார் தோப்புத்தெரு கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.