பாபநாசத்தில் பள்ளி மாணவர்கள், குழந்தைகளுக்கு பாட நோட்டுகள் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூர் ஜூலை 15
தஞ்சை மாவட்டம், பாபநாசம், வங்காரம் பேட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், அரையபுரம் அங்கன்வாடி மையத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மைய பணியாளர் அமுதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கீழ வங்காரம் பேட்டை க. பரணிதரன், மாணவர்களுக்கான கல்வி உபகரனங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் உள்பட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரணிதரன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.