இராராமுத்திரைக்கோட்டை ஊராட்சியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்
தஞ்சாவூர் ஜூலை 24
அம்மாபேட்டை ஒன்றியம், இராராமுத்திரைக்கோட்டை ஊராட்சியில் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் மா,சோழன் கலந்து கொண்டு ஆதார் திருத்தம் சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதாபிரகலாதன் முன்னிலை வகித்தார்
இந்த முகாமில் குழந்தைகளுக்கு புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல் ஆகியவை பதிவு செய்யப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் ராராமுத்திரகோட்டை அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த கிராமத்தினர்
130 பேர் கலந்து கொண்டு ஆதார் பதிவு திருத்தம் ஆகியவை செய்து பயன் அடைந்தனர்
ஏற்பாடுகளை இயற்கைவழி வேளாண்மை
அறக்கட்டளை நிறுவனர் தங்கராசு,உறுப்பினர்கள் சு,அ௫ண்சுபாஷ் பே.ராசு ஆகியோர் செய்திருந்தனர். இறுதியில் ,ஊராட்சி மன்ற செயலர் பி.அசோக் நன்றி தெரிவித்தார்.