அம்மாபேட்டையில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
ஜூலை.10
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை ஆளுநர் இமயவரம்பன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளுக்கு பதவிபிரமானம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தலைவராக முரளி, செயலாளராக வேல்மணி பொருளாளராக ஜனார்த்தனன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். விழாவில் நலிவடைந்த குடும்பத்தினர்க்கு
தையல் இயந்திரம், விவசாயிக்கு கைதெளிப்பான் கருவி, ஆக்ஸிஜன் கருவி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் தென்னங்கன்று வழங்கப்பட்டது இவ்விழாவில் லயன்ஸ் நிர்வாகிகள் மோகன்ராம், நைனா குணசேகர், பொன்மணி, செங்கொடிச்செல்வன், நீலன், அசோகன் பாண்டியன், அனந்தகிருஷ்ணன், மண்டல தலைவர் சிவக்குமார், வட்டார தலைவர் அன்புச் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.