அரையபுரம் வீரமகா சக்தி அம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தஞ்சை மாவட்டம் ஜூலை 29
பாபநாசம், அருகே உள்ள அரையபுரம் கிராமத்தில் உள்ள வீரமகா சக்தி அம்மன் ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம் யாகத்தில் கலந்து கொள்வோர்க்கு திருமண தடை, வம்ச விருத்தி, வியாபாரம் மற்றும் சொத்து வழக்குகளில் வெற்றி பெறவும், குடும்ப பிரச்சனைகள், பூர்வ ஜென்ம பாவம் உள்பட சகல தோஷங்கள் நீங்கி சகல நன்மைகளும் கிடைக்கும். என்பதால் அமாவாசை. அன்று நடைபெறும். யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம் நேற்று ஆடி அமாவாசை முன்னிட்டு வீரமகாசக்தி அம்மன் ஆலயத்தில் சிறப்பு யாகமும், அதனை தொடர்ந்து அம்மனுக்கு விஷேச பூஜையும் நடைபெற்றது இதில்
உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் மிளகாய், நெய் மற்றும் பூ, புஷ்பம் உள்பட திவ்ய வஸ்துகளுடன் யாகம் மற்றும் பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி கோமதி அம்மா மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.