கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை வட்டாரத் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆய்வு...


புதுக்கோட்டை ஜூலை 28

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம்  ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அவர்கள் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், நடைபெற்று வருகிறது. கந்தர்வகோட்டை தெற்கு இல்லம் தேடிக் கல்வி மையத்தை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி அவர்கள் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது கற்றல் ,கற்பித்தல் ஆய்வு ஆலோசனை கூறியபோது.
மாணவர்கள் தொடர்ந்து இல்லம் தேடிக் கல்வி மையத்திற்கு வருகை தரவேண்டும் என்றும், மாணவர்களிடம் இல்லம் தேடிக் கல்வி எவ்வாறு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று கேட்டறிந்தார்.

மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வருவதாக தெரிவித்தனர்.
மேலும் புதுக்கோட்டை யில் தொடங்கும் புத்தக திருவிழாவில் பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார். தினந்தோறும் பாடப் புத்தகத்தை தாண்டி பொது அறிவு புத்தகம், உள்ளிட்ட நூல்களையும்,  வாசித்தல் பழக்கத்தை தொடர தினசரி நாளிதழை படிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பார்வையின் போது வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ், 
இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் உடனிருந்தனர். 
தன்னார்வலர்கள் பாப்பு,மாலதி  ஆகியோர் மாணவர்களுக்கு கட்டுரை ஆர்வத்தை தூண்டும் செயல்பாடுகளான வரைதல், வண்ணம் தீட்டுதல், விளையாட்டு, போன்ற   மனமகிழ்ச்சி செயல்பாடுகளை கொரோனா முழு ஊரடங்கு முடிந்த நிலையில் கற்றலில் ஆர்வம் குன்றிய மாணவர்களுக்கு ஆர்வத்தை தூண்டி மீண்டும் உற்சாகத்தோடு பள்ளிக்கு செல்லும் வகையில்  கற்பித்து வருகின்றனர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?