மதுரை திருமலம் தாலுகா தோப்பூர் ஹவுசிங் போர்டு காவல் நிலையம் அருகே பாம்பு கடித்து மாணவன் தீவிர சிகிச்சை நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்
மதுரை ஜூலை 27
மதுரை தோப்பூர் ஹவுசிங் போர்டு காவல் நிலையம் செல்லும் வழியில் மாலை நேரங்களில் பெரிய வகை பாம்புகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட மாலை 6 மணியளவில் அருகில் இருக்கும் அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த ரோட்டில் நடந்து செல்லும் பொழுது பாம்பு கடித்து அருகில் உள்ள திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிசிச்சை அளிக்க முடியாததால் தற்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துவனையில் சிகிச்சை உள்ளான்
இது போல் இனி நடக்கா வண்னம் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தோப்பூர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்