ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள துர்க்கை அம்மன கோவில் திருவிழாவில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் இதனால் ஒரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்



ஒட்டன்சத்திரம் ஜுலை – 6

தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் அனைத்து சாதியினரும் கலந்துவசித்து வருவதாக கூறுகின்றனர்
இங்கே பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் திருக்கோவில் திருவிழாவில் ஆலய வழிபாடு அனைத்து சாதியினரும் சாதி மதம்பாராமல் ஆண்டாண்டு காலமாக வழிபாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் நேற்று நடைபெற்ற திருவிழாவில் ஒரு பிரிவினர் துர்க்கை அம்மனுக்கு நேர்த்தி கடனாக கொண்டு வந்த நகைகளை தூக்கி வீசியும் தீர்த்த கலசங்களை செலுத்த விடாமலும் முளைப்பாரிகளை எடுத்துச் செல்ல விடாமலும்  தடுத்ததால் ஆத்திரமடைந்த தங்கச்சியம்மாபட்டி கிராம மக்கள் ஒன்று திரண்டு திடீரென
சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர் 
பின் பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் தாங்கள் ஆலய வழிபாடு செய்வதற்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?