புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கந்தர்வகோட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


புதுக்கோட்டை ஜூலை 27

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தக்கடிய ஐந்தாவது புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை  கந்தர்வக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் விஜய லெட்சுமி முன்னிலை வகித்தார்.
அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர் கு.துரையரசன், வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா, செயலாளர் மா.சின்னராஜா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.   பொதுமக்களிடையே புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்து விதமாக தொடர்ச்சியாக பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில்  கந்தர்வக்கோட்டைஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி   மாணவர்கள் புத்தக திருவிழாவிற்கான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வாக பேரணி நடைபெற்றது.      பொதுமக்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள  வேண்டும் என்றும், வாசித்தல் திறனை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும், புத்தகம் ஒவ்வொரு வாழ்விலும் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில் சிறப்பான முறையில் விழிப்புணர்வு பேரணி ஏற்படுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு  பதாகைகள் ஏந்தி  சென்றனர்.
பேரணி முடிந்து மாணவர்களுக்கு புத்தக திருவிழாவில் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொள்ளவும், வாழ்க்கையில் முன்னேறிய பல்வேறு அறிஞர்கள் நூல்களை வாசித்தது தான்  தலைவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், தொடர்ந்து பயணிக்க முடிந்தது அதுபோல மாணவர்களாகிய நீங்கள் பள்ளி பருவத்திலே நல்ல, நல்ல நூல்களை வாங்கி படித்தால் எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக நினைக்கிறீர்களோ அதுவாக நிச்சயமாக வாழ்க்கையில் உயரலாம்.
நல்ல நூல்களை வாங்கி சேமித்து படிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சாந்தி, பாக்கியராஜ், வெங்கடேஷ் ஆகியோர் செய்து இருந்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை