பாபநாசம் அருகே பருத்தி கொள்முதலுக்காக வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் பருத்திக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சை ஜுலை-- 10

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த  வாரம் முதல் பருத்திக்கு குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் மறுஏலம் விட கோரி கடந்தவாரம் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் பருத்திக்கு உரிய விலை கிடைக்க செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர் விவசாயிகள் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு வாரமாக கமிட்டியில் பருத்தி ஏலம் சரிவர நடக்காததால் இந்த வாரம் நாளை  வெள்ளிக்கிழமை  நடக்க உள்ள பருத்தி ஏலத்திற்கு 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பருத்தி தாட்டுகளை எடுத்து வந்து ஒழுங்குமுறை கமிட்டி முன்பு பல மணிநேரமாக காத்திருக்கின்றனர்.
 இந்த வாரம் பருத்தி ஏலத்தில்  விவசாயிகளுக்கு  பருத்திக்கு உரிய  விலைகிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 
 இது குறித்து பருத்தி விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாவது 
கடந்த நான்கு வாரமாக கமிட்டியில் குவிண்டல் 12 ஆயிரம் வரை விலை போன பஞ்சு சென்ற வாரம் 6 ஆயிரத்து 500 என விலை நிர்ணயம் செய்துள்ளனர்.  இது  விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தில், கமிட்டியில்  உள்ளூர் பருத்தி வியாபாரிகள் சிலரை மட்டும் வைத்து குறைந்த விலை நிர்ணயம் செய்து பருத்தியை கொள்முதல் செய்வதும் இதற்கு கமிட்டி  அதிகாரிகள் உடந்தையாக இருந்து வருகின்றனர்.  அதனால பருத்தி விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தை  சந்திக்கும் நிலையில் உள்ளனர். 
அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?